செயல்முறை நடவடிக்கையாக மாறும் அர்ப்பணிப்பு.
செயல்முறை நடவடிக்கையாக மாறும் அர்ப்பணிப்பு.
உண்மையான மனிதத் தேவைகளுக்கு பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடைமுறை ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். வீடமைப்பு, வாழ்வாதாரம், மருத்துவ உதவி மற்றும் அவசர சமூக நிவாரணம் ஆகியவற்றை பொறுப்புணர்வுடன் நாங்கள் முன்னெடுக்கிறோம்.
Engagement

கருணையால் கட்டப்பட்ட பாரம்பரியம்: மோகனமூர்த்தி சுவிஸ் அண்ணா அமைப்பின் வரலாறு
ஒரு கூட்டுறவு கடையில் தொடங்கிய ஒரே ஒரு இரக்கமான செயல், வாழ்நாள் மனிதநேயப் பணியாக வளர்ந்தது. காசிப்பிள்ளை மோகனமூர்த்தி — 'சுவிஸ் அண்ணா' என்று அனைவராலும் அறியப்படுபவர் — தனது வெளிநாட்டு வெற்றியை இலங்கை மக்களுக்கான நேரடி, உறுதியான ஆதரவாக மாற்றி, பல தசாப்தங்களாக மனிதாபிமான சேவைக்கு அர்ப்பணித்தார். மோகனமூர்த்தி சுவிஸ் அண்ணா அமைப்பு, இந்த நீடித்த பணிக்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கட்டமைப்பை வழங்க முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இன்று, வீடமைப்பு, வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் அவசர நிவாரணம் ஆகியவற்றில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நம்பகமான அமைப்பாக இது திகழ்கிறது.
வாழ்க்கையை மாற்றிய மனிதநேயப் பயணம்
'மோகனமூர்த்தி சுவிஸ் அண்ணா' அவர்களின் நெகிழ்ச்சியான மற்றும் மனிதாபிமானத்தை நோக்காக கொண்ட வாழ்வியல் கதை!
எளிமையும் நேர்மையும் கொண்டு, தான் வாழும் சமூகத்திற்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் மனிதர்கள் மிகச் சிலர். அந்த வரிசையில், தன் உழைப்பால் உயர்ந்த நிலையை அடைந்தும், தாய்நாட்டு மக்களின் துயர் துடைப்பதே தன் வாழ்நாள் கடமை என வாழ்பவர் தான் 'சுவிஸ் அண்ணா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் காசிப்பிள்ளை மோகனமூர்த்தி அவர்கள்.
வறுமையில் பூத்த மனிதநேயம்
ஏழ்மையான குடும்பச் சூழலில் பிறந்து, வறுமையின் காரணமாகத் தனது 10-ஆம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டவர் மோகனமூர்த்தி. படிப்பைக் கைவிட்டாலும், குடும்பப் பொறுப்பை ஏற்க ஒரு கூட்டுறவு வியாபார நிலையத்தில் பணியாளராகச் சேர்ந்தார். அங்குப் பொருட்கள் வாங்க வரும் ஏழைத் தாய்மார்களின் கஷ்டத்தைக் கண்டு, அவர்களுக்குக் கடனாகவும் சில வேளைகளில் இலவசமாகவும் பொருட்களை வழங்கி உதவினார். இதனைக் கவனித்த அவருடைய தாய், 'மகனே, வேலையில் பிரச்சனை வந்தால் என்ன செய்வது, ஏன் இப்படிச் செய்கிறாய்?' என்று கேட்டபோது, அவர் கூறிய பதில் அனைவரையும் சிந்திக்க வைப்பது:
"அம்மா, நீயும் என்னை இப்படிக் கடனுக்குப் பொருட்கள் வாங்கியும், உன் ஆபரணங்களை அடமானம் வைத்தும்தானே வளர்த்தாய்! அன்று உனக்குக் கடனுக்குப் பொருட்கள் தந்து உதவியவர்களைப் போலத்தானே நானும் இன்று செய்கிறேன்!" அக்கணமே, மனிதநேயப் பணியைத் தனது வாழ்வின் முதன்மை இலட்சியமாக அவர் நெஞ்சில் ஏந்தினார்.
புலம்பெயர் வாழ்வும் தாய்நாட்டுக்கான சேவையும்
தனது சேவையை மேலும் விரிவுபடுத்த வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்தார். அங்கு ஓயாது உழைத்துத் தன் கால்களில் உறுதியாக நின்ற பின், தாய்நாட்டு மக்களுக்கு உதவத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஊடகவியலாளர் ஐபிசி பாஸ்கரன் போன்ற ஊடக முகங்கள் மூலமாக அவர்களது 64வது உதவித் திட்டதில் இணைந்து செய்தார். இருப்பினும், பிறர் மூலமாகச் செய்வதை விடத் தானே நேரடியாகக் களத்தில் இறங்கினால்தான் உதவிகள் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்பதை உணர்ந்து, நேரடியாகக் களப்பணியில் ஈடுபடத் தொடங்கினார். அன்று முதல் இன்றுவரை ஓய்வின்றி உழைத்து மக்களுக்கு மனிதநேய சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
மக்களால் சூட்டப்பட்ட மகுடம்: 'சுவிஸ் அண்ணா'
தனக்கு 66 வயதான போதிலும் ஓய்வெடுக்காமல் உழைத்து வரும் அவர், தனது செல்வத்தை வங்கிக் கணக்குகளிலோ அல்லது சொத்துக்களாகவோ சேர்த்து வைக்காமல், இலங்கை மக்களுக்காகச் செலவிட்டு வருகிறார். இதனால் மக்கள் அனைவராலும் அன்போடு 'அப்பா' என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள நம்பிக்கைக்குரிய தன்னார்வலர்களைக் கண்டறிந்து, அவர்கள் மூலம் பல உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். மக்கள் அன்போடு அவருக்குச் சூட்டிய 'சுவிஸ் அண்ணா' என்ற பெயரையே தனது தொண்டு நிறுவனத்திற்குச் சூட்டி, 'மோகனமூர்த்தி சுவிஸ் அண்ணா' அமைப்பை முறைப்படி பதிவு செய்து, வெளிப்படையான சேவையை வழங்கி வருகிறார்.
எண்ணிக்கை அல்ல... மனிதநேயமே முழுமையான வாழ்வியல் மாற்றம்!
நூறு பேருக்கு அரைகுறையாக உதவுவதை விட, ஒருவருக்குச் செய்தாலும் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறும் வகையில் நிறைவாகச் செய்ய வேண்டும் என்பதே இவரது கொள்கை. அதனால் தான் மற்ற செல்வந்தர்களைக் காட்டிலும் இவருடைய மனிதநேயப் பாதை தனித்துவமாக உள்ளது.
"என்னுடைய தட்டில் என்ன உணவு உள்ளதோ, அதே போல நான் உதவும் மக்களின் தட்டிலும் இருக்க வேண்டும்"
சிந்தனை மாற்றம்
வெறும் பொருளாதார உதவி மட்டுமன்றி, மக்களைச் சிந்தனை ரீதியாகவும் மாற்றி, சமூக அடிமைத்தனங்களில் இருந்தும் விடுவிக்கத் தீவிரமாகச் செயல்படுகிறார்.
இன நல்லிணக்கம்
வடக்கு, கிழக்கு என பாகுபாடின்றி தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின மக்களுக்கும் சமமாக உதவிகளை வழங்கி வருகிறார்.
இரத்த தான முகாம்
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களையும் ஒன்றாக இணைத்து மாபெரும் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தி, இன நல்லிணக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
முழுமையான வாழ்வியல் உதவி
வீடல்லாதவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார், பல்வேறு மாணவர்களுக்கு கல்விதைத் தொடர உதவி செய்துள்ளார், பல ஏழைக் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக வாழ்வாதார உதவிகளைச் செய்துள்ளார் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்துள்ளார்.
தனது குடும்பத்தின் சொத்தாகத் தன் உழைப்பைச் சேமிக்காமல், தன் தாய் நாட்டு மக்களுக்காக 7 கோடிகளுக்கு மேலாக மனிதநேயச் சேவைகளைச் செய்து தாய்நாட்டு மக்களின் விடிவெள்ளியாகத் திகழும் மோகனமூர்த்தி சுவிஸ் அண்ணா அவர்களின் மனிதநேயப் பயணம், இன்றுள்ள செல்வந்தர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு வரலாற்றுப் பாடம்!
இந்த சமூக ஊடக தளங்கள் வழியாக நான் தெரிவிப்பது வெறுமனே நான் என்ன செய்தேன் என்பது மட்டுமல்ல; மாறாக, எதிர்கால சந்ததியினர் மனிதாபிமானப் பாதையில் நடக்கும் வகையில், என் மக்களுக்கு நான் விட்டுச் செல்லும் மனிதாபிமான கருத்தாக்கம் பற்றியதாகும்.
எங்கள் பயணம்
ஒரு உள்ளூர் முயற்சியிலிருந்து விரிவான ஆதரவு வலையமைப்பாக எங்கள் வளர்ச்சி.
எளிய தொடக்கம்
உள்ளூர் மாவட்டங்களில் உடனடி அவசர சமூக நிவாரணத்தில் கவனம் செலுத்தி முதல் களப்பணிகளைத் தொடங்கினோம்.
எளிய தொடக்கம்
உள்ளூர் மாவட்டங்களில் உடனடி அவசர சமூக நிவாரணத்தில் கவனம் செலுத்தி முதல் களப்பணிகளைத் தொடங்கினோம்.
விரிவாக்கம்
தற்காலிக நிவாரணத்திலிருந்து நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு மாறும் வகையில் வீடமைப்பு திட்டங்களைத் தொடங்கினோம்.
விரிவாக்கம்
தற்காலிக நிவாரணத்திலிருந்து நிலையான நீண்டகால வளர்ச்சிக்கு மாறும் வகையில் வீடமைப்பு திட்டங்களைத் தொடங்கினோம்.
வாழ்வாதார வலுவூட்டல்
பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களிடையே பொருளாதார சுதந்திரத்தை வளர்க்க திறன் மேம்பாடு மற்றும் குறு நிதி உதவிகளை அறிமுகப்படுத்தினோம்.
வாழ்வாதார வலுவூட்டல்
பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களிடையே பொருளாதார சுதந்திரத்தை வளர்க்க திறன் மேம்பாடு மற்றும் குறு நிதி உதவிகளை அறிமுகப்படுத்தினோம்.
டிஜிட்டல் மாற்றம்
அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நவீன அறிக்கையிடல் கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
டிஜிட்டல் மாற்றம்
அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக நவீன அறிக்கையிடல் கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
எங்களை வழிநடத்துவது எது
ஒவ்வொரு நபரும் கண்ணியத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நம்பிக்கையே எங்களை வழிநடத்துகிறது.– அருண் மூர்த்தி, நிறுவுனர் & இயக்குனர்
எங்களை வழிநடத்துவது எது
ஒவ்வொரு மனிதரும் கண்ணியத்துடன் வாழும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.– அருண் மூர்த்தி, நிறுவுனர் & இயக்குனர்
